ADDED : செப் 19, 2025 02:18 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி போட்டி நடந்தது.
அலுவலர் சிவா, புரவலர் சுந்தரராஜன் துவக்கிவைத்தனர். அன்னை தெரசா மகளிர் பல்கலை மாணவிகள் முதலிடம், திண்டுக்கல் எம்.வி.எம்.,கலைக்கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்றனர்.
அவர்களுக்கு பல்கலை துணைவேந்தர் கலா வாழ்த்து கூறினார். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.