ADDED : செப் 19, 2025 02:19 AM
வேடசந்துார்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சத்யபிரியா 48. இவரது மகள்கள் டிரினிட்டி 22, ஷீர்லீ ஆகியோர் மதுரைக்கு காரில் சென்றனர். ஓசூரை சேர்ந்த ஓட்டுநர் சல்மான் 24, ஓட்டினார்.
வேடசந்துார் விருதலைப்பட்டி அருகே வந்தபோது முன்னாள் சென்ற டூவீலர் மீது மோதியது. கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
காரில் வந்த நான்கு பேர் டூவீலரில் வந்த எத்தலாம்பட்டியை சேர்ந்த காமராஜ் காயமடைந்தார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.