/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தனியார் பஸ்சை சிறைபிடித்த அரசு பஸ் டிரைவர், நடத்துனர் தனியார் பஸ்சை சிறைபிடித்த அரசு பஸ் டிரைவர், நடத்துனர்
தனியார் பஸ்சை சிறைபிடித்த அரசு பஸ் டிரைவர், நடத்துனர்
தனியார் பஸ்சை சிறைபிடித்த அரசு பஸ் டிரைவர், நடத்துனர்
தனியார் பஸ்சை சிறைபிடித்த அரசு பஸ் டிரைவர், நடத்துனர்
ADDED : செப் 20, 2025 04:24 AM
திண்டுக்கல்: நேர பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பஸ் ஓட்டுநர், நடத்துனர்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லிலிருந்து இருந்து மதுரைக்கு தினமும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பஸ்களும் புறப்பட குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்றுக்கு மதியம் 12:30 மணிக்கு புறப்பட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேரத்திற்கு கிளம்பாமல் பயணிகளை ஏற்றினர். அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கேட்டபோது தனியார் பஸ் டிரைவர் அவதுாறாக பேசினார்.
பஸ் ஸ்டாண்டை விட்டு தனியார் பஸ் வெளியே வந்த போது திருவள்ளுவர் ரோட்டில் அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சேர்ந்த பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
கண்காணிப்பு அலுவலர்கள் சமாதானத்திற்கு பின் கலைந்து சென்றனர்.