அ.தி.மு.க.,வில் மாற்று கட்சியினர்
அ.தி.மு.க.,வில் மாற்று கட்சியினர்
அ.தி.மு.க.,வில் மாற்று கட்சியினர்
ADDED : செப் 20, 2025 04:24 AM
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இல்லத்தில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
விஸ்வநாதன், ஜெ பேரவை ஆர்.வி.என்.கண்ணன், வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் முன்னிலையில், வத்தலகுண்டு கோம்பைபட்டி தி.மு.க., கிளை செயலாளர் வேலுச்சாமி அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் 50க்கு மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்.
சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜான், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருவி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்நாத் கலந்து கொண்டனர்.