/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கோடைகால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கை அவசியம்கோடைகால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கை அவசியம்
கோடைகால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கை அவசியம்
கோடைகால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கை அவசியம்
கோடைகால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கை அவசியம்
ADDED : மார் 12, 2025 01:25 AM

கோடை துவங்கும் முன்பே நகர் மட்டுமின்றி கிராமங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு பரவலாக கொடூர தாக்கத்தை வெளிப்படுத்த துவங்கி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இச்சூழலின் பாதிப்பை மக்கள் நேரடியாக உணரும் நிலை இருந்தது. ஆண்டுதோறும் மழையளவு கணிசமாக குறைந்து வரும் சூழலில் தண்ணீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. தண்ணீரின் மகத்துவத்தை பல வழிகளிலும் உணர்த்திய போதும் இதனை பாதுகாத்து சேமிப்பது பயன்படுத்துவதில் தற்போது வரை அலட்சியம் நீடிக்கிறது. மழைநீரின் அடிப்படையான பசுமையை பாதிக்கும் வகையில் மரம், காடுகள் அழிப்பு, விளைநிலங்கள் கட்டடங்களாக மாறுதல் போன்ற அம்சங்கள் வெகுவாக தொடர்கிறது.
வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு, வாய்க்கால், குளங்களை தூர்வாரி நீராதாரங்களை மேம்படுத்தல் போன்றவை ஏட்டளவில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. பெரும்பாலான நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் அழிந்துள்ளன. கழிவு குவியல்களால் தூர்ந்த நிலையில் சமீபத்திய மழை நீர் குளம் கண்மாய் போன்ற சேமிப்பு அமைப்புகளை சென்றடையவில்லை.
மழையின் பயனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியாத அளவிற்கு வீணானது. தட்டுப்பாட்டின் தாக்கத்தை தவிர்க்க ஆழ்துளை கிணறு, கூட்டுக் குடிநீர் திட்ட வினியோக வழித்தடங்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழாய்கள் சேதம் அடைவதை தவிர்க்கும் பொருட்டு தரமான உதிரி பாகங்கள் மூலம் தண்ணீர் வளங்களை தடையின்றி மேற்கொள்ள முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.