ADDED : ஜூன் 27, 2025 12:55 AM

கொடைக்கானல்: - கொடைக்கானல் ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் தன்னார்வலர்களை கொண்டு வனத்துறையினர் குப்பையை அகற்றினர்.
கொடைக்கானல் வனத்துறை, சோலை குருவி அமைப்பு, தனியார் விடுதி, தெரசா பல்கலை மாணவர்கள், தன்னார்வலர்கள் கோசன் ரோடு முதல் மோயர் சதுக்கம் வரை உள்ள ரோட்டோர வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற குப்பையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு டன் குப்பை அகற்றப்பட்டன. இதன் மூலம் மக்கும், மக்காத குப்பை பிரித்து எடுக்கப்பட்டு பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து வனவிலங்கான யானை ஓவியம் வரையப்பட்டது.
தொடர்ந்து வனப்பகுதியை துாய்மையாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ரேஞ்சர் பழனிக்குமார்,வனவர் மதியழகன் , சோலைக்குருவி அமைப்பினர் கலந்து கொண்டனர்.