ADDED : ஜன 04, 2024 02:54 AM
ஒட்டன்சத்திரம்: பெருந்துறையில் இயங்கி வரும் தனியார் மாட்டு தீவன நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொருளூர் குப்பாயிவலசில் சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.
இதை திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரிவேல் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் துவக்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலசுப்ரமணியம், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கேசவமூர்த்தி கலந்து கொண்டனர்.