Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வண்டல் மண்ணை பட்டா நிலத்தில் வைத்து செங்கல் சூளைக்கு மாற்றம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு

வண்டல் மண்ணை பட்டா நிலத்தில் வைத்து செங்கல் சூளைக்கு மாற்றம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு

வண்டல் மண்ணை பட்டா நிலத்தில் வைத்து செங்கல் சூளைக்கு மாற்றம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு

வண்டல் மண்ணை பட்டா நிலத்தில் வைத்து செங்கல் சூளைக்கு மாற்றம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு

ADDED : செப் 23, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
பழநி: குளத்தில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை பட்டா நிலங்களில் வைத்து செங்கல் சூளைக்கு அனுப்புவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

பழநியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் காலை 10:00 மணிக்கே வந்திருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் மதியம் 12:00 மணி வரை வராததால் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் நடைபெற்றது .தாசில்தார் பிரசன்னா அதிகாரிகள் பங்கேற்றனர்.

விவசாயிகள் விவாதம்;

ராமசாமி, தொப்பம்பட்டி: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை அறிவிக்கப்பட்ட நேரத்தில் நடத்த வேண்டும். தாமதம் குறித்து முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். இங்கு வரும் விவசாயிகளுக்கு தண்ணீர் கூட இல்லாத நிலை உள்ளது.

ஆர்.டி.ஓ.,: இந்நிலை விரைவில் சரி செய்யப்படும். அனைவருக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாண்டியன், ஆயக்குடி: ஆயக்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெட்டுக்காடு பகுதியில் வனத்துறையினர் அளவீடு செய்தனர்.

இது குறித்து திண்டுக்கல் கலெக்டர் குறைதீர்கூட்டத்தில் கேட்டபோது ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கணக்கீடு என கூறினர். ஆனால் தற்போது விவசாயிகள் பயன்படுத்தி வரும் இடத்தை ஆக்கிரமிப்பு பகுதி, ரிசர்வ் பாரஸ்ட் என கூறுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஆர்.டி.ஓ.,: விசாரிக்கப்படும்.

ராமசாமி, தொப்பம்பட்டி: செங்கல் சூளைகள் அதிகரித்து வருகின்றன. பசுமை தீர்ப்பாயத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட துாரத்திற்கு குடியிருப்பு பகுதிகள் இருக்கக் கூடாது என உள்ளது. ஆனால் அவற்றை மீறி செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐவர் மலை புதுார் கிராமத்தில் உள்ள வீடுகள் முறைப்படி அப்ரூவல் பெறவில்லை என்பதற்காக கிராமம் இல்லை என ஆகிவிடாது. நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது.

ஆர் டி.ஓ.,: ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமசாமி, தொப்பம்பட்டி : ஆயக்குடி கொய்யா மார்க்கெட் பகுதியில் கழிப்பறை வசதிகள் கூட இல்லை .

ஆர்.டி.ஓ.,: நடவடிக்கை எடுக்கப்படும்

சக்திவேல்,பெரியம்மாபட்டி: குளத்தில் விவசாயத்திற்காக வண்டல் மண் அள்ள அனுமதி பெற்று அதை பட்டா நிலங்களில் கொட்டி செங்கல் சூளைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஆர்.டி.ஓ.,: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பழநியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் காலை 10:00 மணிக்கே வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் மதியம் 12:00 மணி வரை வராததால் தாசில்தார் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us