/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பட்டுப்போன மரங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றலாமே! ஆடிகாற்றில் விபரீதம் முன் தேவை நடவடிக்கை பட்டுப்போன மரங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றலாமே! ஆடிகாற்றில் விபரீதம் முன் தேவை நடவடிக்கை
பட்டுப்போன மரங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றலாமே! ஆடிகாற்றில் விபரீதம் முன் தேவை நடவடிக்கை
பட்டுப்போன மரங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றலாமே! ஆடிகாற்றில் விபரீதம் முன் தேவை நடவடிக்கை
பட்டுப்போன மரங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றலாமே! ஆடிகாற்றில் விபரீதம் முன் தேவை நடவடிக்கை
ADDED : ஜூலை 30, 2024 05:45 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் ஆடிக்காற்று வீசி வரும் நிலையில் பட்டுப்போன மரங்கள், உயரத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிறது.
மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பராமரிக்கப்படாத பஸ் கூரைகள் பெயர்த்து விழுகின்றன. நாளுக்கு நாள் காற்றின் வேகம் குறைவதாக இல்லை. இதை கருதி பல்வேறு பகுதிகளில் உள்ள பழமையான ,பட்டுப்போன மரங்களின் கிளைகள் , கட்டட மாடிகளில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிக்னல்கள், சென்டர் மீடியன்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எப்போது வேண்டுமானலும் காற்றில் பறந்து விபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. இதேபோல் நகரின் எல்லை ,முக்கிய கடைவீதிப்பகுதிகளில் கட்டடங்களில் மாடிகளில் பல அடி உயரத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளால் வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகள் காற்றின் வேகத்தில் விழ வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்கள் நேரும் முன் அதன் உறுதித்தன்மையை சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதோடு ரோட்டோரங்களில் பேனர்களை வைப்பதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். தற்போது உள்ளவற்றையும் அகற்ற வேண்டும். கொடைக்கானல், சிறுமலை செல்லும் மலைப்பாதைகளில் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட வேண்டும். பட்டுப்போன மரங்களை கண்டறிந்து முழுமையாக அகற்றுவதால் விபத்துக்களை தவிர்க்க உதவும்.
.....................
தேவை முன்னெச்சரிக்கை
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் டூவீலர்களில் செல்வதே சிரமமாக உள்ளது. துசியால் ஓட்ட முடிவதில்லை. ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் காற்றில் விழுந்து விடுமோ என அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. ரோட்டோர மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பதோடு ,ஆட்கள் மீது விழுந்தால் பெரும் விபரீதம் ஏற்படும் சூழல் உள்ளது. இதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது .
திருப்பதி, பா.ம.க., மாவட்ட தலைவர், திண்டுக்கல் .
,,,,,,,,,,,,