/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3 ஆண்டுகளில் ரூ.11.91 கோடி மானியம்; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல் 3 ஆண்டுகளில் ரூ.11.91 கோடி மானியம்; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்
3 ஆண்டுகளில் ரூ.11.91 கோடி மானியம்; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்
3 ஆண்டுகளில் ரூ.11.91 கோடி மானியம்; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்
3 ஆண்டுகளில் ரூ.11.91 கோடி மானியம்; மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தகவல்
ADDED : ஜூலை 30, 2024 05:45 AM
திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் 439 பேருக்கு ரூ.11.91 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக'' தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
மாவட்டத் தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்படும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட பணிகளை பொதுமேலாளர் கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: 2023--24 நிதியாண்டில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 280 நபர்களின் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
48 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.4.70 கோடி கடன் தொகை வழங்கப்பட்டு அதற்கு மானியமாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 31 பயனாளிகளுக்கு ரூ.3.55 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 69 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது.
தகுதி வாய்ந்த 2 பயனாளிகளுக்கு ரூ.26.64 லட்சம் கடன் , மானியமாக ரூ.6.97 லட்சம் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளில் 50 பயனாளிகளுக்கு ரூ.4.79 கோடி, ரூ.2.60 கோடி மானியம் வழங்கப்பட்டது.
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் 3 ஆண்டுகளில் 439 பயனாளிகளுக்கு ரூ.33.77 கோடி கடன் தொகை வழங்கப்பட்டது.
மானியமாக ரூ.11.91 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.