ADDED : ஜூன் 15, 2025 06:55 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கோயம்புத்துார், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய லயன்ஸ் மாவட்டத்தின் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், புதிய நிர்வாகிகளுக்கான தலைமை பண்பு பயிற்சி நடந்தது.
ஊர்வலத்தை தமிழ்நாடு, புதுச்சேரி கூட்டு மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் டி. பி. ரவீந்திரன், மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம் தொடங்கி வைத்தனர்.
தலைமை பண்பு பயிற்சி முகாம் மாவட்ட கவர்னர் தேர்வு ராஜசேகர் தலைமையில் நடந்தது.
சுற்றுச்சூழல் நிர்வாகி ராஜ்மோகன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முன்னாள் சர்வதேச இயக்குனர் தனபாலன் கலந்து கொண்டனர். மரக்கன்று நடும் விழாவும் நடந்தது.