/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு
ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு
ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு
ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 06:51 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த 'லோக் அதாலத்'நிகழ்ச்சிகளில் ஒரே நாளில் 3132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.முன் வழக்குகள், முடிவுக்கு வராத வழக்குகள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 'லோக் அதாலத்'நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள 14 நீதிமன்றங்களில் நேற்று நடந்தது.
திண்டுக்கலில் மாவட்ட நீதிபதி முத்துசாரதா தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 3132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இழப்பீடு தொகையாக ரூ.11 கோடி 66 லட்சத்து 97 ஆயிரத்து 632 வழங்கப்பட்டது.திண்டுக்கல்லில் மாவட்ட நீதிபதி முத்துசாரதா வாகன விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு தொகையை வழங்கினார் .
அனைவருக்கும் கபசுரக்குடி நீர் வழங்கப்பட்டது.நீதிபதிகள் சரண், வேல்முருகன், விஜயகுமார், முரளிதரன், கோகுல கிருஷ்ணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் திரிவேணி கலந்துகொண்டனர்.