ADDED : ஜூன் 01, 2025 04:01 AM

பழநி: பழநி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செந்தில்குமார் 197 பயனாளிகளுக்கான ஆணைகளை வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, நளினா, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர்.