பழநி: எட்டாவது சம்பள கமிஷனை உடனே நிறைவேற்ற வேண்டும்.
பத்து சதவீத காலி பணியிடங்கள் இருந்தால் ஐ.ஆர்.டி இடமாற்றம் என்ற ரயில்வே போர்டு உத்தரவை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழநி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ., கிளை செயலாளர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.