ADDED : செப் 21, 2025 04:34 AM

ஒட்டன்சத்திரம்: பெங்களூருவில் நடக்க உள்ள 35 வது ஜூனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு தமிழக அணி சார்பில் ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் சி.சந்தோஷ் தேர்வாகி உள்ளார். மாணவரை பெற்றோர் முன்னிலையில் பள்ளி நிறுவனர் சாமிநாதன் ரூ.10 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.
தாளாளர் சித்தார்த்தன், செயலாளர் கவுதமன், பள்ளி முதல்வர் நர்மதாஸ்ரீ வாழ்த்து தெரிவித்தனர்.