/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊராட்சிகளுக்கான மானிய நிதி குறைக்கப்பட்டதால் திணறல் ஊராட்சிகளுக்கான மானிய நிதி குறைக்கப்பட்டதால் திணறல்
ஊராட்சிகளுக்கான மானிய நிதி குறைக்கப்பட்டதால் திணறல்
ஊராட்சிகளுக்கான மானிய நிதி குறைக்கப்பட்டதால் திணறல்
ஊராட்சிகளுக்கான மானிய நிதி குறைக்கப்பட்டதால் திணறல்
ADDED : ஜூலை 03, 2025 04:57 AM

மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு, மக்கள் தொகை அடிப்படையில், ஊராட்சி வாரியாக மாதாந்திர பராமரிப்பு நிதி (எஸ்.எப்.சி.,) வழங்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டுதான், குடிநீர் மோட்டார், பைப் லைன், தெரு விளக்கு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செயல்படுத்தப் படுகின்றன.
காற்றடி காலத்தில், தெருவிளக்குகள், மின்மோட்டார் பழுது அடிக்கடி நடைபெறுவதாக கூறுகின்றனர். அதேபோல் ஆதிதிராவிட மக்களுக்கான ஈமக் கிரியை நிதி, தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுவதும், தற்காலிக குடிநீர் மோட்டார் இயக்குபவர்களுக்கும், இந்த நிதியில் இருந்து தான் சம்பளம் வழங்க வேண்டும்.
இப்படி ஊராட்சிகளுக்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிதியை, ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பில் இருந்த போது வழங்கியது போல் அல்லாமல், பெரிய ஊராட்சிகளுக்கு சரிபாதியாக குறைத்து வழங்குகின்றனர். அதாவது, ஒரு பெரிய ஊராட்சிக்கு ரூ. ஒரு லட்சம் பராமரிப்பு நிதி வழங்கப்பட்டது என்றால், தற்போது ரூ.50 ஆயிரம் தான் வழங்கப்படுகிறது. மற்ற சாதாரண சிறு ஊராட்சிகளுக்கு, பராமரிப்பு நிதியாக மாதம் ரூ.10 ஆயிரம் தான் வழங்கப்படுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிதியை குறைத்ததால் ஊராட்சி நிர்வாகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. எனவே முன்பு போல் பராமரிப்பு நிதியை உயர்த்தி வழங்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.