/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உருக்குலைந்த மின் கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து உருக்குலைந்த மின் கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து
உருக்குலைந்த மின் கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து
உருக்குலைந்த மின் கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து
உருக்குலைந்த மின் கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து
ADDED : செப் 12, 2025 04:29 AM

குப்பையால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல் என். எஸ். நகர் அருகே விநாயகா நகரில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது .குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகேஸ்வரி என். எஸ். நகர்.
...................--------கோழிக் கழிவுகளால் தொற்று
திண்டுக்கல் - மதுரை ரோட்டில் கோழிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது .பல நாட்களாக அள்ளாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் நோய் தொற்றுக்கு வழிவகுக்கிறது .கோழிக்கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும். முரளி, திண்டுக்கல்.
..............---------மின்கம்பத்தால் விபத்து
சின்னாளபட்டி பேரூராட்சி 15வது வார்டில் மின்கம்பம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது .அருகே செல்ல அச்சுறுத்தலாக உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற மின்துறை முன் வர வேண்டும். -ஆர்.செந்தில்குமார், சின்னாளபட்டி.
.........---------
பஸ்சில் ஆபத்து பயணம்
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு சிலுவத்துார் ரோட்டில் பஸ்களில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை பார்க்கும் போது மனம் பதறுகிறது .அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எ.ஆர். சித்தீக், ரவுண்ட் ரோடு.
........---------வழிகாட்டி பலகையால் குழப்பம்
திண்டுக்கல் பாண்டியன் நகர் 1வது தெருவில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி., அலுவலக வழிகாட்டி பலகை அகற்றப்படாதால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுத்து பலகையை அகற்ற வேண்டும். -- சக்திவேல், தாமரைப்பாடி.
.............---------சாக்கடை பாலம் சேதம்
பஞ்சம்பட்டி ஊராட்சி கொசவபட்டி சூசையப்பர் தெருவில் இரண்டு தெரு பிரியும் சாக்கடை பாலம் உடைந்து பல மாதங்களாகியும் சரி செய்யாமல் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பயணிப்பதில் ஆபத்து நிலை உள்ளது. அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். அந்தோணி, கொசவபட்டி.
..............---------ரோடை தோண்டி சேதம்
பழநி திண்டுக்கல் ரோடு பழனியாண்டவர் காலேஜ் பஸ் ஸ்டாப் அருகே கேபிள் வயர் பதிக்க ரோட்டை தோண்டி சேதப்படுத்தி அப்படியே விட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் . பாலாஜி ,பழநி.
..........