Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு காந்திகிராம பல்கலை டாக்டர் பட்டம்

கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு காந்திகிராம பல்கலை டாக்டர் பட்டம்

கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு காந்திகிராம பல்கலை டாக்டர் பட்டம்

கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு காந்திகிராம பல்கலை டாக்டர் பட்டம்

ADDED : அக் 06, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி:முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

காந்திகிராம பல்கலையில் வேந்தர் அண்ணாமலை தலைமையில் 38 வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

வேந்தர் பேசுகையில், ''சமீபத்திய ஆண்டுகளில் பல்கலை பல்வேறு துறைகளில் அபரிமித முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. பல்கலைக்கு தேசிய தர சான்றிதழாக அங்கீகாரம் கிடைத்தது அனைவரின் ஒருங்கிணைந்த உழைப்பின் பலனாகும்.

இப்பல்கலையின் பல பேராசிரியர்கள், உலகின் முன்னணி 2 சதவீதம் விஞ்ஞானிகளுக்கான பட்டியலில் இடம் பெற்றிருப்பதும், உலக ஆராய்ச்சிக்கு அளித்த பங்களிப்பும் அளவிட முடியாதது. உலகளாவிய முன்னணி பல்கலைகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு சர்வதேச ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பொன்விழா கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் இச்சூழலில், எதிர்கால இலக்குகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பல்கலை பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி, எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். 2023--24, 2024--25ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோருக்கு பட்டம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us