ADDED : அக் 06, 2025 01:47 AM
பழநி:பழநி தாளையம் அருகே சப்பளநாயக்கம்பட்டி பகுதியிலிருந்து திண்டுக்கல் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த பாலத்தின் சுவரில் மோதியது.
இதில் திண்டுக்கல் எம்.எஸ்.நகரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் வெங்கடேஷன் 30, சம்பவ இடத்தில் இறந்தார். அவருடன் வந்த நிர்மல் 32, பலத்த காயமடைந்தார்.
காரில் இருந்த மற்றவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து பழநி சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


