ADDED : ஜன 01, 2024 05:58 AM

ஒட்டன்சத்திரம்: காப்பிலியபட்டி கல்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டின் நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் காவேரியம்மாபட்டியில் நடந்தது.
இந்த ஊராட்சியின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் பனை விதைகளை நடவு செய்தனர். இங்குள்ள கோயில் வளாகத்தில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஸ், முதல்வர் செந்தில்,துணை முதல்வர் மங்கையர்கரசி, மாவட்ட தொடர்பு அலுவலர் சுவுந்தரராஜன், திட்ட அலுவலர் சவுந்திரபாண்டியன், டாக்டர் நவநீதகிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் பெருமாளம்மாள் பங்கேற்றனர்.