/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்
தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்
தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்
தெரு நாய்கள் தொல்லை கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜன 13, 2024 04:02 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டம் தலைவர் திருமலைசாமி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது துணைத்தலைவர் வெள்ளைச்சாமி (தி.மு.க.,) கமிஷனர் கணேஷ் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்:
பழனிச்சாமி (தி.மு.க.,), ஜெயமணி (தி.மு.க.), அழகேஸ்வரி (தி.மு.க.,): நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ராஜமோகன் (துப்புரவு ஆய்வாளர்) : விலங்குகள் நல வாரியத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்
ஜெயமணி(தி.மு.க.): தெருக்களின் சந்திப்புக்களில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை
முகமது மீரான் (காங்.,): தெரு விளக்குகளின் வெளிச்சம் குறைவாக உள்ளது. அதிக ஒளி தரும் விளக்குகளை பொருத்த வேண்டும்
கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயமணி (தி.மு.க.), : வார்டு அடிப்படைப் பிரச்னைகள் குறித்து தெரிவித்த பின்பும் நிறைவேற்ற தாமதம் ஆகிறது.
தலைவர்: வார்டு பிரச்னைகளை நிவர்த்தி செய்ய செல்லும்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
முகமது மீரான் (காங்.,) : திண்டுக்கல் பழநி ரோட்டில் தெற்கு பகுதியில் பேட்டரி வண்டி மூலம் குப்பை அள்ளுவதே கிடையாது.
அழகேஸ்வரி (தி.மு.க.,): வ.உ.சி.நகரில் குப்பையை அகற்ற தாமதமாவதால் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன.
ராஜமோகன் (துப்புரவு ஆய்வாளர்): துாய்மை பணியாளர்களில் ஐந்து பேர் நீண்ட விடுப்பில் உள்ளதால் தாமதமாகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படைகள் வசதிகள் செய்து தருவதற்கு ரூ.5 லட்சத்திற்கான தீர்மானம் உட்பட 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.