/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தடுப்பூசி திட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் : செவிலியர் கூட்டமைப்பு எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் : செவிலியர் கூட்டமைப்பு எதிர்ப்பு
தடுப்பூசி திட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் : செவிலியர் கூட்டமைப்பு எதிர்ப்பு
தடுப்பூசி திட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் : செவிலியர் கூட்டமைப்பு எதிர்ப்பு
தடுப்பூசி திட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் : செவிலியர் கூட்டமைப்பு எதிர்ப்பு
ADDED : ஜூன் 27, 2025 02:57 AM
திண்டுக்கல்:''தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அனுபவமில்லாத ஒப்பந்த செவிலியர்களை ஈடுபடுத்தக்கூடாது ''என செவிலியர் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் நிர்மலா கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது :
தடுப்பூசி திட்டத்தில் 40 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்கள் பணி செய்கின்றனர். துணை சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் அனுபவமற்ற ஒப்பந்த செவிலியர்களை ஈடுபடுத்தக் கூடாது.இது போல் துணை சுகாதார மையங்களில் ஒப்பந்த செவிலியர்களை எம்.எல்.எச்.பி.,யாக நியமனம் செய்வதை கைவிட வேண்டும். துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது.
புதிதாக துவங்கப்பட உள்ள 642 துணை சுகாதார நிலையங்களுக்கும் கிராம சுகாதார செவிலியர் பணியிடம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 4000 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஜூலை 1ல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும். அடுத்தக்கட்டமாக மாநில அளவிலான போராட்டம் சென்னையில் நடத்தப்படும் என்றார்.