ADDED : மே 29, 2025 02:06 AM
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கசவனம்பட்டி அருகே கொரலம்பட்டி பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி தனது சொந்த செலவில் சமுதாயக்கூடம் அமைக்க ரூ.50 லட்சம் வழங்கினார்.
இதன் திறப்பு விழா ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சிவகுருசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட தி.மு.க., பொருளாளர் சத்தியமூர்த்தி, கசவனம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சக்தி முன்னிலை வகித்தனர்.