ADDED : மார் 19, 2025 05:38 AM
பழநி : பழநிக்கு வந்த கலெக்டர் சரவணன் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் 33 கவுன்சிலர்களும் அளித்த மனுவில், கிரி வீதி நீரேற்று நிலையத்திலிருந்து பழநி நகருக்கு புவியீர்ப்பு விசை மூலம் தண்ணீர் வழங்க அமைக்கப்பட்டு வரும் குழாய்களை கிரி வீதியில் அமைக்க கோயில் நிர்வாகம் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டினர். கலெக்டர் இந்திராநகரில் இலவச பட்டா வழங்கும் இடம், கலக்கநாயக்கன்பட்டியில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார்.