ADDED : பிப் 06, 2024 07:16 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் ரூ 10.15 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகள், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையில் ரூ.21.25 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய காய்கனி வளாக கட்டுமான பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கவேல், நகராட்சி கமிஷனர் கணேஷ், உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், தாசில்தார் முத்துசாமி உதவி பொறியாளர் ராஜமோகன் பங்கேற்றனர்.