பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து
பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து
பஸ் மீது சரக்கு வேன் மோதி விபத்து
ADDED : ஜூன் 14, 2025 12:17 AM
திண்டுக்கல்,: திண்டுக்கல் அருகே சரக்கு வேன் அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல்லிலிருந்து நேற்று மதியம் 3:15 மணிக்கு தேனி சென்ற அரசு பஸ்சை பழநியை சேர்ந்த பிரதாப் ஓட்டினார். வையம்பட்டி ஆறுமுகம் கண்டக்டராக சென்றார். 43 பயணிகள் பயணம் செய்தனர். வத்தலக்குண்டு ரோடு குட்டியப்பட்டி பிரிவு அருகே சென்ற போது நடுவே தடுப்புகள் இருந்ததால் டிரைவர் வேகத்தை குறைத்தார். எதிர் திசையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்தது.
இதைப்பார்த்த டிரைவர், உடனே பஸ்சை நிறுத்தினார். அதற்குள் அந்த வேன் பஸ் மீது மோதியது. தாலுகா போலீசார் தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். வேன் டிரைவரான நத்தம் சக்திவேல் 34, மாங்காய்களை ஏற்றிக்கொண்டு நத்தம் சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.