ADDED : செப் 17, 2025 03:37 AM

செம்பட்டி : சித்தையன்கோட்டையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை தீ வைத்து எரித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
சித்தையன்கோட்டையை சேர்ந்த சகோதரர்கள் அப்துல்லா 42, ஷபிபுல்லா 40,இந்தாதுல்லா 35, பரக்கத்துல்லா 32. சித்தையன்கோட்டை திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் டீகடை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். பரக்கத்துல்லாவுக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இது நேற்று அதிகாலை தீ பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.
கதவின் கண்ணாடியை உடைத்து காருக்குள் மது பாட்டில்கள் வீசப்பட்டிருந்தன. பாட்டில் துகள்களை சேகரித்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீ வைக்கப்பட்டதா என விசாரிக்கின்றனர்.கைரேகை, தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்த நிலையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும் போலீசார் விசாரிக்கின்றனர்.