/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரோடுகளில் ஆக்கிரமித்த மின்கம்பங்களை அகற்றலாமே: தேவை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கைரோடுகளில் ஆக்கிரமித்த மின்கம்பங்களை அகற்றலாமே: தேவை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை
ரோடுகளில் ஆக்கிரமித்த மின்கம்பங்களை அகற்றலாமே: தேவை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை
ரோடுகளில் ஆக்கிரமித்த மின்கம்பங்களை அகற்றலாமே: தேவை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை
ரோடுகளில் ஆக்கிரமித்த மின்கம்பங்களை அகற்றலாமே: தேவை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை
UPDATED : ஜன 01, 2024 07:13 AM
ADDED : ஜன 01, 2024 05:54 AM

மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க பல இடங்களில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பாரம் ரோட்டிற்கு இடையூறாக முளைத்தது.
வாகனங்கள் பெருகி வருவதால் நெடுஞ்சாலை துறை சார்பில் பல இடங்களில் ரோடுகள் விரிவாக்க பணி நடக்கிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் ரோடுகள் விரிவாக்க பணியில் வணிக கட்டடங்களின் ஆக்கிரமிப்பின் மீது காட்டும் இரும்புக்கர நடவடிக்கையை மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரம்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை சுணக்கம் காட்டுகிறது. இப்படி அகற்றப்படாமல் உள்ள மின்கம்பங்கள்,டிரான்ஸ்பாரங்கள் ரோட்டிற்கு இடையூறாக வந்தது. ரோட்டில் செல்லும் வாகனங்கள் இந்த மின்இணைப்புகளில் உரசிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படுவதால் விபத்து நடந்து விடும் என பொதுமக்கள் தினமும் அஞ்சுகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் மின் டிரான்ஸ்பாரம்களில் அடிக்கடி தீப்பொறிகளும் பறந்து தெறிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமுடனே செல்லும் நிலை உள்ளது.
மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசலான பல இடங்களில் பாதி ரோட்டை ஆக்கிரமித்து மின்கம்பங்கள் நிற்பதால் பாதசாரிகளுக்கு வழியின்றி நெடுஞ்சாலை ரோடுகளே குறுகலாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து அதிகமான பகுதிகளில் மின்கம்பம்,டிரான்ஸ்பாரம்களை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் இப்பிரச்னை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.