ADDED : மார் 23, 2025 06:20 AM
பழநி : பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து சண்முக நதி நெய்க்காரப்பட்டி வழியாக பெருமாள் புதுார், பாப்பம்பட்டி வழியாக ஆண்டிபட்டி, சண்முகம் பாறை வழியாக புளியம்பட்டி வழித்தடங்களில் புதிய பஸ் சேவையை எம் .எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார்.
ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் பிரசன்னா, போக்குவரத்து கோட்ட மேலாளர் முகமது ராவுத்தர், துணை மேலாளர் ஜெகதீசன் ,கிளை மேலாளர் ஜெயக்குமார், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நகரச் செயலாளர் வேலுமணி கலந்து கொண்டனர்.