ADDED : ஜூன் 30, 2025 03:49 AM
பட்டிவீரன்பட்டி : சேவுகம்பட்டி பேரூராட்சி எம். வாடிப்பட்டியில் திண்டுக்கல் எம்.பி., நிதி ரூ. 13 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
எம்.பி., சச்சிதானந்தம், பேரூராட்சித் தலைவர் வனிதா, நகர செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் தெய்வராணி, கவுன்சிலர்கள் விஜி, தனபால், தவபாண்டியன் பாலமுருகன், இளநிலை பொறியாளர் கருப்பையா, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.