ADDED : செப் 19, 2025 02:20 AM
திண்டுக்கல்:பழனி கீரனுார் அருகே உள்ள மார்க்கண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் துாய்மைப்பணியாளர் நாச்சாம்மாள்.
தோட்டத்துக்கு பாதை அமைக்கும் பிரச்னையில் இவரை அதேப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி அடியாட்களுடன் வந்து தாக்கினார்.
கீரனுார் போலீசார் சுப்பன் மீது மட்டும் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய கிருஷ்ணசாமி, மகேந்திரன், தமிழ்செல்வி, காளீஸ்வரி, ஆறுமுகம், ஆகியோர் மீது வழக்குப்பதிய தலித் விடுதலை இயக்க மாநிலத்தலைவர் கருப்பையா தலைமையில் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனுக்கொடுத்தனர்.