Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பேலீஸ் செய்திகள் ...

பேலீஸ் செய்திகள் ...

பேலீஸ் செய்திகள் ...

பேலீஸ் செய்திகள் ...

ADDED : பிப் 06, 2024 07:18 AM


Google News
தடை புகையிலை பறிமுதல்

நத்தம்: நத்தம் பஸ்ஸ்டாண்ட், அவுட்டர் பகுதி கடைகளில் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., ஜெய்கணேஷ், தனிப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். டீ கடை ஒன்றில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததை தொடர்ந்து ராஜேஷ் 40, என்பவரை கைது செய்த 24 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.

கோபுர கலசம் திருட்டு

வடமதுரை :தென்னம்பட்டி எரியோடு ரோட்டில் நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கோபுரத்தில் இருந்த தாமிர கலசம், கருங்காலி மரத்துண்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடினர். கோயில் செயலாளர் தண்டபாணி புகாரில் வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆயுதங்களுடன் இருவர் கைது

திண்டுக்கல் : செல்லாண்டியம்மன் கோயிலை சேர்ந்தவர் சாகுல்23. பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முகமதுசவ்பான்24. இருவரும் ஆயுதங்களுடன் திண்டுக்கல் நகரில் சுற்றித்திரிந்தனர். தகவலறிந்தனர். மேற்கு போலீசார் இருவரையும் கைது செய்து கத்திகளை பறிமுதல் செய்தனர்.

சதித்திட்டம் தீட்டிய ஐவர் கைது

திண்டுக்கல்: பெரியபள்ளப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்22. குழந்தைபட்டியை சேர்ந்த யோகேஷ்24,மலவார்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன்30,அம்மையப்பன்36,குழிப்பட்டியை சேர்ந்த விஜய்22, ஆகிய ஐவரும் முள்ளிப்பாடி சந்தவர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். தாலுகா போலீசார் ஐவரையும் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் வாலிபர் பலி

பழநி : ஆயக்குடியைச் சேர்ந்த மாதவன் 18. கல்லூரி மாணவரான இவர் நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் ஆயக்குடியில் இருந்து பழநி சென்றார். திண்டுக்கல் சாலை செக் போஸ்ட் அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் மாதவன் இறந்தார். (ஹெல்மெட் அணியவில்லை) பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

பஸ்சில் மோதி தொழிலாளி காயம்

வேடசந்துார்: தாடிக்கொம்பு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் தனியார் நுாற்பாலை டிரைவர் மணிகண்டன் 28. விட்டல்நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவரை முந்தி சென்ற தனியார் பஸ் பஸ் ஸ்டாப்பில் நின்றது. செய்வறியாத மணிகண்டன் பஸ்சின் பின்பகுதியில் மோதி பலத்த காயமடைந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்

பெண் குழந்தை இறப்பில் சந்தேகம்

எரியோடு: கோவிலுார் அருகே பில்லக்காபட்டி சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தைகள் உள்ளன. 5 நாட்களுக்கு முன் மூன்றாவதாக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை இறந்ததாக கூறி வீட்டின் அருகில் புதைத்தனர். ஆர்.கோம்பை வி.ஏ.ஓ., தியாகராஜன் புகாரில் எரியோடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்று (பிப்.6) குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடல் கூறு ஆய்வு செய்ய உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us