/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கடனை கட்ட கோரி நிர்பந்தம் ஆட்டோ டிரைவர் தற்கொலை கடனை கட்ட கோரி நிர்பந்தம் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கடனை கட்ட கோரி நிர்பந்தம் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கடனை கட்ட கோரி நிர்பந்தம் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கடனை கட்ட கோரி நிர்பந்தம் ஆட்டோ டிரைவர் தற்கொலை
ADDED : ஜூன் 27, 2025 12:48 AM
வேடசந்துார்: கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன் 58. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். திண்டுக்கல் தனியார் டிராக்டர் கம்பெனி விற்பனையாளர்கள் முருகனிடம் பேசி உழவு டிராக்டர் ஒன்றை வாங்க சம்மதிக்க வைத்துள்ளனர்.
திண்டுக்கல் கம்பெனிக்கு சென்ற முருகனிடம் டிராக்டரை காட்டி ரூ. 8.35 லட்சம் என பேசி முடித்து தனியார் நிதி நிறுவன ஏஜன்ட்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர்களும் முருகனிடம் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டு டிராக்டருக்கான பணத்தை டிராக்டர் கம்பெனியில் செலுத்தி உள்ளனர்.
ஆனால் முருகன் டிராக்டரை வைத்து ஓட்டி சம்பாதிக்க முடியாது என்பதால் டிராக்டரை எடுக்கவில்லை. ஆனால் நிதி நிறுவனத்தினரோ முருகன் செலுத்த வேண்டிய மாத தொகையை கேட்டு வற்புறுத்தி உள்ளனர். மனம் உடைந்த முருகன் பூச்சி மருந்தை குடித்து இறந்தார்.