பைரவர் கோயில்களில் அஷ்டமி வழிபாடு
பைரவர் கோயில்களில் அஷ்டமி வழிபாடு
பைரவர் கோயில்களில் அஷ்டமி வழிபாடு
ADDED : ஜூன் 04, 2025 01:12 AM
நத்தம்: நத்தம் குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில் காலபைரவருக்கு வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள கால பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.