ADDED : ஜூன் 07, 2025 12:33 AM
வத்தலக்குண்டு: மேலக்கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார்.
ஆசிரியர் நாகஜோதி முன்னிலை வகித்தார். பயிற்சி ஆசிரியர் சுதா வரவேற்றார். 440 க்கு அதிகமான மார்க் பெற்ற மாணவிகள் ஆஷிகா, தனலட்சுமி, 350 க்கு மேல் மதிப்பெண் பெற்ற ரெக்சிலின், வர்ஷினி, தீபபிரபா, ஹிதேந்திரன், மனோஜ், அருனிசா, தீனா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் சங்க தலைவர் மருது ஆறுமுகம், காங் வட்டார தலைவர் காமாட்சி, பா.ஜ., ஒன்றிய தலைவர் செந்தில், முன்னாள் மாணவர்கள் ரெக்ஸ், செபஸ்டின் பங்கேற்றனர் மேலாண்மை குழு தலைவர் மரியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் தங்கபாண்டி செய்திருந்தார்.