ADDED : செப் 10, 2025 08:12 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் ராஜக்காபட்டியில் ஸ்ரீ ஆனந்த சுவாமி கோயில் 12-ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி கோயில் முழுவதும் பூப்பந்தல் அமைக்கப்பட்டு சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.காலை 9:30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 11:00 மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகை பொருள்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ,மகாதீபாராதனை நடைபெற்றது. 100 க்கு மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.
திண்டுக்கல் நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகவேல், பொருளாளர் கணேசன், மாவட்ட கால்பந்து கழக துணை தலைவர் ரமேஷ் பட்டேல், அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை தலைவர் சந்திரன், எஸ்.கே.சி., டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சண்முகவேல், தேனி ஆனந்தம் உரிமையாளர் ஆனந்த், புதுக்கோட்டை தொழிலதிபர் குமார், திண்டுக்கல் குருவம்மாள் ரைஸ் மில் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன், ஓய்வு தாசில்தார் சக்திவேல், மீனாட்சி நாயக்கன் பட்டி மிராஸ்தார் அய்யாவு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எஸ்.ராமச்சந்திரன்-ராஜேஸ்வரி, எஸ்.கணேசன்-ஜெயசித்ரா, எஸ்.அசோக் பாண்டியன்-சுசித்ரா, இஷாந்த் குமார்-சுகன்யா செய்திருந்தனர்.