/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/'கொடை' யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு'கொடை' யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
'கொடை' யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
'கொடை' யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
'கொடை' யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 29, 2024 06:14 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் 1991--94 ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட சந்திப்பு நடந்தது. தனியார் விடுதியில் நடந்த இதில் முன்னாள் மாணவர்கள் 60 பேர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்லுாரி நினைவுகள் ,தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இளைய தலைமுறையினர்க்கு நட்பு , உறவு குறித்து கருத்துகளை பறிமாறி கொண்டனர். 30 வது ஆண்டு நடக்கும் மாணவர் சந்திப்பு 3 நாள் நடந்த நிலையில் இசை, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளில் ஈடுபட்டனர். பாதுகாப்புத்துறை நுண்ணறிவு டி.ஜ.ஜி., திருநாவுக்கரசு குடும்பத்துடன் கலந்து கொண்டார்.