புதிய உச்சத்தில் பங்குச்சந்தைகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதிய உச்சத்தில் பங்குச்சந்தைகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதிய உச்சத்தில் பங்குச்சந்தைகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 18, 2024 06:20 PM

மும்பை: இன்றைய வர்த்தக நேர முடிவில், இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 626.91 புள்ளிகள் உயர்ந்து 81,346.63 புள்ளிகளாகவும், நிப்டி 187.85 புள்ளிகள் உயர்ந்து 24,800.85 புள்ளிகள் ஆகவும் இருந்தது.
ஐடி மற்றும் வங்கி துறை பங்குகளை வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்கியதால் நிப்டி புதிய உச்சத்தை எட்டியது. இந்த துறைகளில் பங்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்ததால் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியதாக நிபுணர்கள் தெரிவித்தனர். பங்குச்சந்தைகள் உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.