Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இதையும் கண்காணியுங்க: உள்ளாட்சிகளில் தரமற்ற குடிநீர் சப்ளை: நோய் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

இதையும் கண்காணியுங்க: உள்ளாட்சிகளில் தரமற்ற குடிநீர் சப்ளை: நோய் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

இதையும் கண்காணியுங்க: உள்ளாட்சிகளில் தரமற்ற குடிநீர் சப்ளை: நோய் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

இதையும் கண்காணியுங்க: உள்ளாட்சிகளில் தரமற்ற குடிநீர் சப்ளை: நோய் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

ADDED : ஜன 04, 2024 02:45 AM


Google News
Latest Tamil News
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் துவக்க காலகட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக ஆறு, குளம். கிணறு, ஆழ்துளை மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டன. முறையாக சப்ளை செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் மேல்நிலைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன.

இதை கண்காணிக்க ஆப்பரேட்டர்கள் நியமித்து மாதந்தோறும் குடிநீர் தொட்டிகள் துாய்மை செய்து அதில் குளோரின் கலந்து சுத்திகரிப்பு செய்ததற்கு பின்னே சப்ளை செய்யப்படுவது வாடிக்கையாக இருந்தது. தற்போது இந்த நடைமுறை ஒரு சில பகுதிகளில் மட்டும் கடைபிடிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் வெறுமனே நீர் நிலையிலிருந்து வரும் தண்ணீரை சுத்திகரிப்பின்றி சப்ளை செய்கின்றனர்.

மழைக்காலங்களில் நீர்நிலையில் உள்ள தண்ணீரில் கிருமி, பூச்சி, கலங்கல் குடிநீர் என நேரடியாக சப்ளையாவதால் நோய் பரவல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கின்றனர். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுகுறித்து புகார் தெரிவித்த போதும் நடவடிக்கையை எடுத்ததாக தெரியவில்லை.

மாறாக குடிநீர் சுத்திகரிப்பின்றி சப்ளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர். நீர் நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குளோரின் கலப்பிற்கு பின் சப்ளை செய்ய மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us