ADDED : மே 30, 2025 03:45 AM
திண்டுக்கல்: தானம், சுகம் அறக்கட்டளைகள், தானம் மக்கள் கல்வி நிலையம் இணைந்து இலவச மதுபோதை சிகிச்சை, மறுவாழ்வு முகாம் நடத்துகிறது.
10 நாட்கள் நடக்கும் முகாம் தானம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தேவநேசன் தலைமையில் துவங்கியது. மைய நிறுவனர் ரத்தினம், ஒருங்கிணைப்பாளர்கள் தயா, கேசவராஜ், சண்முகலதா பங்கேற்றனர்.