Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரக்கன்றுகள்,மூலிகை செடிகளுடன் பசுமைக்கு வித்திடும் அறக்கட்டளை

மரக்கன்றுகள்,மூலிகை செடிகளுடன் பசுமைக்கு வித்திடும் அறக்கட்டளை

மரக்கன்றுகள்,மூலிகை செடிகளுடன் பசுமைக்கு வித்திடும் அறக்கட்டளை

மரக்கன்றுகள்,மூலிகை செடிகளுடன் பசுமைக்கு வித்திடும் அறக்கட்டளை

ADDED : செப் 10, 2025 08:05 AM


Google News
Latest Tamil News
மரக்கன்றுகள், மூலிகை செடிகள் நடுவதன் மூலம் பசுமையை அதிகரித்து அதில் மாணவர்களையும் தங்கள் பக்கம் திருப்பி உள்ளனர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளையினர்.

நத்தம் சுற்றுவட்டாரத்தில் ஹச்.ஐ. எல்.எஜூகேஷன் டிரஸ்ட், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து மரக்கன்றுகள், பனை விதைகள், இல்லங்கள் தோறும் மூலிகை செடிகள் நடவு செய்து வருகின்றன.

அதனால் ஏற்படும் நன்மைகள், பிளாஸ்டிக் பை தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

மாணவர்கள் அறிவை வளர்க்கும் விதமாக அறிவியல் கண்காட்சி நடத்தி அதில் திறமையாக அறிவியல் படைப்புகள் செய்த மாணவர்கள், இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறார்கள். நத்தம், ரெட்டியார்சத்திரம், மதுரை, அய்யலுார், சின்னாளபட்டி, கோபால்பட்டி, காந்திகிராமம், குஜிலியம்பாறை, சாணார்பட்டி, கொண்டன் செட்டிபட்டி, ராமன் செட்டிபட்டி, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மரங்களை நட்டு அப்பகுதியை பசுமையாக்கி வருகின்றனர். 8 ஆண்டுகளாக சமூக பணியில் ஈடுபட்டு வருவதன் மூலம் இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் மூலம் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கின்றனர். இன்றைய தலைமுறையிடம் விதைக்கப்படும் விழிப்புணர்வு மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமான மேம்பாட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சமூக பணிஆற்றி வருகின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் மருதைகலாம்,நிர்வாகி, அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை, சாணார்பட்டி: சமூக பணிக்கென தனி நேரம் ஒதுக்கி விழிப்புணர்வு, சமுதாய மேம்பாட்டிற்கான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் மன நிறைவு ஏற்பபடுகிறது. இயற்கை வழி வேளாண்மையை ஊக்குவிப்பதன் மூலம் நிலம், நீர், காற்று மாசுபடுதலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

இயன்ற அளவு பசுமையான மரக்கன்று நடவு, பராமரிப்பு போன்ற வற்றை மேற்கொண்டு வருவதன் மூலம் மழை நீர், தரமான உணவு உற்பத்தி போன்றவற்றிற்கு அடித்தளம் அமைக்க முடியும். பனை விதை நடவு, மரக்கன்று வளர்ப்பு, பராமரிப்பு,இவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் போன்றவற்றை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறோம்.

பசுமை பணியுடன் சமூக சேவை ஏ.இன்னாசி ராஜா, அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை திட்ட மேலாளர், சாணார்பட்டி: மாவட்ட அளவில் அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் கல்லுாரிகள், பல்கலையில் மரக்கன்று நடுவது , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரம் நடுதல், மூலிகை செடி நடுதல் ,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ,பனைவிதை நடுதல், அரசுப் பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி கற்றுத் தருதல்,கோடைகாலங்களில் நீர் மோர் தொடங்கி மக்கள் தாகத்தை தீர்த்து வைத்தல் என எண்ணற்ற சமூக சேவை செய்து வருகிறோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us