/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' கோடை விழாவில் நாய் கண்காட்சி; 16 வகையை சேர்ந்த 52 நாய்கள் பங்கேற்பு 'கொடை' கோடை விழாவில் நாய் கண்காட்சி; 16 வகையை சேர்ந்த 52 நாய்கள் பங்கேற்பு
'கொடை' கோடை விழாவில் நாய் கண்காட்சி; 16 வகையை சேர்ந்த 52 நாய்கள் பங்கேற்பு
'கொடை' கோடை விழாவில் நாய் கண்காட்சி; 16 வகையை சேர்ந்த 52 நாய்கள் பங்கேற்பு
'கொடை' கோடை விழாவில் நாய் கண்காட்சி; 16 வகையை சேர்ந்த 52 நாய்கள் பங்கேற்பு
ADDED : மே 31, 2025 12:32 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் மலர் கண்காட்சி, கோடை விழாவில் கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி நடந்தது. இதில் 16 வகையை சேர்ந்த 52 நாய்கள் பங்கேற்றன.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கால்நடைத்துறை சார்பில் 24-வது நாய் கண்காட்சி நடந்தது. 5 பிரிவாக நடந்த போட்டியில் டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், கோல்டன் ரெட்ரீவர், ராட் வில்லர், சைபீரியன் ஹஸ்கி, பாக்சர், ஸ்பானிஷ் மவுண்டைன், இங்கிலீஷ் பாயிண்டர், புல் மாஸ்டிப். சிஜூ, மின் பின், பீகில் இந்தியன் பிட்ஸ், அமெரிக்கன் புல்லி கிரேடன்,ராஜபாளையம் உள்ளிட்ட 16 வகை நாய்கள் கலந்து கொண்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்த ராகவனின் டாபர்மேன் தட்டி சென்றது.
கால்நடைத்துறை உதவி இயக்குனர்கள் பிரபு, சங்கர விநாயகம், ஜெயராஜ் முன்னிலையில் நடந்த இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அப்துல் ஹக்கீம் கலந்து கொண்டார்.