/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கதவை உடைத்து வீட்டிலிருந்த 4 பவுன், பணம் கொள்ளை கதவை உடைத்து வீட்டிலிருந்த 4 பவுன், பணம் கொள்ளை
கதவை உடைத்து வீட்டிலிருந்த 4 பவுன், பணம் கொள்ளை
கதவை உடைத்து வீட்டிலிருந்த 4 பவுன், பணம் கொள்ளை
கதவை உடைத்து வீட்டிலிருந்த 4 பவுன், பணம் கொள்ளை
ADDED : ஜூன் 18, 2025 01:13 AM
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே பகலிலேயே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேடசந்துார் அருகே வாங்கலாபுரத்தைச் சேர்ந்தவர் நுாற்பாலை கண்காணிப்பாளர் இளங்கோ பாண்டியன் 37. இவரது மனைவி மாசிலாமணி 28. மகன் தீபக் 10. இளங்கோபாண்டியன் வேலைக்கும் மகன் தீபக் பள்ளிக்கும் சென்ற நிலையில் மாசிலாமணி ரேஷன் கடைக்கு உணவுப்பொருட்கள் வாங்க சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி மர்மநபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர் பீரோவை உடைத்து அதிலிருந்த நான்கு பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார். இளங்கோ பாண்டியன் புகாரின்படி இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் கொள்ளையடித்து சென்றவரை தேடி வருகின்றனர்.