/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தலைதுாக்கும் போதை கலாசாரம் தடம் மாறும் இளைஞர்கள், கண்டுகொள்ளாத போலீஸ் தலைதுாக்கும் போதை கலாசாரம் தடம் மாறும் இளைஞர்கள், கண்டுகொள்ளாத போலீஸ்
தலைதுாக்கும் போதை கலாசாரம் தடம் மாறும் இளைஞர்கள், கண்டுகொள்ளாத போலீஸ்
தலைதுாக்கும் போதை கலாசாரம் தடம் மாறும் இளைஞர்கள், கண்டுகொள்ளாத போலீஸ்
தலைதுாக்கும் போதை கலாசாரம் தடம் மாறும் இளைஞர்கள், கண்டுகொள்ளாத போலீஸ்
ADDED : ஜூலை 10, 2024 04:48 AM
பண்ணைக்காடு: தாண்டிக்குடி மலைப்பகுதியில் போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பால் இளைஞர்கள் தடம் மாறி போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இம்மலைப் பகுதியில் 50க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சமீபமாக கஞ்சா, அபின், பிரவுன் சுகர், குட்கா பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பண்ணைக்காடு பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி ஆசிரியரை தாக்க முயன்ற சம்பவம், என அத்துமீறலில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். தொடரும் போதை கலாசாரத்தால் இளைஞர்கள் வாழ்வு தடம் மாறி செல்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். சட்ட விரோத மது விற்பனையும் கட்டுப்பாடின்றி போதை இளைஞர்களை சீரழிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டிப்பு காட்ட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.