/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மோடி ஆட்சி சிறப்பாக தொடர கொடைக்கானலில் யாகம் மோடி ஆட்சி சிறப்பாக தொடர கொடைக்கானலில் யாகம்
மோடி ஆட்சி சிறப்பாக தொடர கொடைக்கானலில் யாகம்
மோடி ஆட்சி சிறப்பாக தொடர கொடைக்கானலில் யாகம்
மோடி ஆட்சி சிறப்பாக தொடர கொடைக்கானலில் யாகம்
ADDED : ஜூன் 12, 2024 02:53 AM

கொடைக்கானல்:பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி புரிய கொடைக்கானலில் அஸ்வமேத ராஜ சிம்மாசன யாகம் நடந்தது.
இந்த யாகத்தை நடத்திய கூடலுார் ஸ்ரீ மகாசக்தி மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் கூறியதாவது: 7200 ஆண்டுகளுக்கு முன் ராமர் ஆட்சி காலத்தில் ஆட்சி சிறப்புற நடைபெற இத்தகைய யாகம் நடத்தப்பட்டது.
மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள நரேந்திர மோடியின் ஆட்சி சிறப்பாக தொடர தற்போது கொடைக்கானல் அப்சர்வேட்டரி முனீஸ்வரன் கோயிலில் இந்த யாகம் செய்கிறோம்.
தேர்தலின் போதும் இங்கு அஸ்வமேத யாகம் மட்டும் வளர்க்கப்பட்டது.
'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்ற போதும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
அந்த கூட்டணி விரைவில் சிதறிவிடும். பா.ஜ., ஆட்சி இந்த ஐந்தாண்டுகள் மட்டுமின்றி மேலும் இருமுறையும் தொடரும்.
அண்ணாமலை பெயரிட்டு தி.மு.க.,வினர் ஆட்டை வெட்டியது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆட்சேபம் தெரிவிக்காதது அவர்களது தன்மையை உணர்த்துவதாக உள்ளது என்றார்.