ADDED : ஜூன் 12, 2024 06:34 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.2.55 கோடி கிடைத்தது.-
பழநி முருகன் கோயிலில் ஜூன் 10,11 என இரு நாட்கள் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் 965 கிராம் தங்கம், 29.158 கிலோ வெள்ளி ,ரூ. 2 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 740 , 574 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.