/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வூசு மகளிர் லீக்: மாணவிகளுக்கு பாராட்டு வூசு மகளிர் லீக்: மாணவிகளுக்கு பாராட்டு
வூசு மகளிர் லீக்: மாணவிகளுக்கு பாராட்டு
வூசு மகளிர் லீக்: மாணவிகளுக்கு பாராட்டு
வூசு மகளிர் லீக்: மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 18, 2024 08:26 AM

திண்டுக்கல் : தென் மண்டல கேலோ இந்தியா வூசு மகளிர் லீக் போட்டியில் தமிழக அணியில் பதக்கங்கள் வென்ற திண்டுக்கல் மாவட்ட மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
கர்நாடகா பாகல்கோட்டில் ஜூன் 10 முதல் 13 தென் மண்டல கேலோ இந்தியா வூசு மகளிர் லீக் போட்டி நடந்தது. ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தெலுங்கானா, அந்தமான் அண்டு நிக்கோபார், லட்சத்தீவு, ஒடிசா மாநிலங்களை சேர்ந்த 400க்கு மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 104 மாணவிகள் பங்கேற்று 16 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை வென்று தென் மண்டல சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். இப்போட்டியில் தமிழக அணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவிகள் தவுலு பிரிவில் பங்கேற்றனர்.
இதில் ரேஹிதா, ரேஷ்மி, சுவஸ்ரீ வெள்ளிப் பதக்கம், கங்கா வர்ஷினி, நேஹாமரினா, கலாந்திகா வெண்கல பதக்கம் பெற்றனர். இவர்கள் செப்டம்பரில் மகாராஷ்டிராவில் நடக்கும் தேசிய கேலோ இந்தியா வூசு உமன் லீக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பதக்கம்பெற்ற மாணவிகள், பயிற்சி அளித்த மாஸ்டர் ஜாக்கி சங்கர் ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில் மாவட்ட வூசு சங்க தலைவர் மணிகண்டன், கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், கோச் டபி குரு, மனிதநேயம் ஞானகுரு பாராட்டினர்.