/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சாடல் சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சாடல்
சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சாடல்
சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சாடல்
சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சாடல்
ADDED : ஜூன் 19, 2024 02:00 AM
திண்டுக்கல்:''சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக போலீசார் செயல்படுகின்றனர்,'' என, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது: ரயில் விபத்து ஏற்படும்போதெல்லாம் கவாச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும், இது போன்ற விபத்து இனி நேராது எனவும் ரயில்வே அமைச்சர் அறிவித்து வருகிறார். ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எப்படி வர முடியும். நான்கு ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் பலர் இறந்துள்ளனர்.
இனியும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை. விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு முறைகேடுகளால் 23 லட்சம் மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கல்வித் தரம், மருத்துவத் தரம் உயர்ந்துவிடவில்லை. நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய சொல்லவில்லை. விரும்பாத மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும்.
திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் அலுவலகம் மீதும், நிர்வாகிகள் மீதும் போலீசார் பாதுகாப்புக்கு இருக்கும்போதே கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.
சமூக விரோதிகளுக்குத் தான் போலீசார் பாதுகாப்பாக இருந்தனர்.
போலீஸ் துறையில் இருப்பவர்களே ஜாதிய உணர்வோடு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்க முடியும். ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறி.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலை சந்திக்கும் தைரியம் அ.தி.மு.க.,விற்கு இல்லை. பழனிசாமி முழு கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது என்றார்.