ADDED : ஜூன் 04, 2024 06:16 AM
பழநி: பழநி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள்களுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
பழநி பாரதி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி 28. தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமாரை 32, ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார். நேற்று கணவன், மனைவி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தனித்தனியே பழநி மகளிர் போலீசில் புகார் அளிக்க வந்தனர்.
மகேஸ்வரி, அவரது தாயார் இருவரும் போலீசார் புகார் பெற மறுப்பதாாக கூறி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தைக்கு பின் பழநி டவுன் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டனர்.