Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு

காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு

காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு

காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு

ADDED : ஜூன் 04, 2024 06:15 AM


Google News
திண்டுக்கல்: பழநி மேற்கு கிரி வீதி அண்ணாசெட்டி மடம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், தங்கள் குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் உள்ள கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கூறுகையில்,' ஆக்கிரமிப்பு அகற்றத்தை தொடர்ந்து குடியிருப்புகளை காலி செய்து புறநகர் பகுதி மருத்துவ நகரிலுள்ள காலி இடத்திற்கு செல்லுமாறு வருவாய்த் துறையினர் அறிவுறுத்துகின்றனர். காலி மனையாக உள்ள அந்த இடத்துக்கு முறையான பட்டா இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளோம். எனவே, வருவாய்த் துறை காட்டும் இடத்துக்கு பட்டா வழங்கினால் உடனடியாக வெளியேறி விடுவோம்' என்றனர். இவர்களிடம், ஆர்.டி.ஓ., சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தல் முடிவுகள் வெளியான பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்க கலைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us